தும்மலின் போது கண்களை திறந்து வைக்க முடியாதா?! ஏன் தெரியுமா?
தும்மல் என்பது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.
பொதுவாக கண்களை மூடி கொண்டு தான் தும்மல் ஏற்படும். ஏன் கண்களைத் திறக்கக் கொண்டு தும்மல் முடியவில்லை எப்போதாவது யோசித்து பார்த்திருகிறீர்களா? தும்மல் என்பது முழு உடலையும் அசைக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும்.
ஆனால் உங்கள் கண்களைத் திறந்து தும்முவது சாத்தியமா? கண்களைத் திறந்து தும்ம முடியாது என்ற கூற்று உண்மையா அல்லது கட்டுக்கதையா? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வாமை, குளிர் காலநிலை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை தும்மலின் பொதுவான தூண்டுதல்களாக உள்ளது.
தும்மல் 200 மைல் வேகத்தில் இருந்ததாக முந்தைய மதிப்பீடுகள் கூறுகிறது. சில ஆய்வுகள், 10 மைல்களுக்கு மேல் இல்லை என்று கூறுகின்றன.
தும்மும்போது உங்கள் கண்கள் ஏன் மூடுகின்றன?
தும்மலின் போது கண்கள் ஏன் தானாக மூடிக் கொள்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. கண்களைப் பாதுகாக்க இது நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தும்மல் கண்களைச் சுற்றியுள்ள தசைகள் உள்பட பல தசைகளை உள்ளடக்கியிருப்பதால், முகத்தின் தன்னிச்சையான தசை சுருக்கங்கள் காரணமாகவும் இது நடக்கிறது. அதனால் அவை சுருங்கும்போது, கண் இமைகளும் மூடப்படுகிறது என்று கூறுகின்றனர்.
கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியுமா?
கண்களைத் திறந்த நிலையில் தும்ம முடியும். ஆனால் இதற்கு கூடுதல் முயற்சி தேவை என்று கூறுகின்றனர்.
நிமிடத்திற்கு 15-20 முறை கண் சிமிட்டுவதை கருத்தில் கொண்டால், கண் இமை தசைகள் உடலில் உள்ள வலிமையான தசைகளில் ஒன்றாகும்.

தும்மல் போன்ற செயல்பாட்டின் போது, கண் இமைகளைத் திறந்து வைப்பது சவாலான ஒன்றாகும். இதற்கு எதிராக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பல யூடியூபர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண் இமைகளை கைகளால் திறந்து வைத்திருப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
