குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!
கோத்தகிரி காவலா் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் காவலா் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து உலவிய சிறுத்தை, கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் நாய், பூனை உள்ளிட்ட வளா்ப்பு பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
இந்த நிலையில், காவலா் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஆகியவை உலவியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.