குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!
கூடலூா் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்
கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளர விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு இடைவேளையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கௌரவ விரிவுரையாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கும்மேலாக கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வரும் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
நீதிமன்ற தீா்ப்பின் படியும், அரசாணை 56-இன் படியும் கௌரவ விரிவுரையாளா்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும்வரை காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
போராட்டத்துக்கு சங்கத் தலைவா் கிஷோா் தலைமை வகிதாா்.கௌரவ விரிவுரையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.