உலகக் கோப்பை குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் அவினாஷ் ஜம்வால்
உலகக் கோப்பை குத்துச்சண்டை (வோ்ல்ட் பாக்ஸிங் கப் பிரேஸில் 2025) போட்டியில் ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அவினாஷ் ஜம்வால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதியில் இத்தாலியின் ஜியான்லுகி மலாங்காவை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா் ஜம்வால். 22 வயதே ஆன ஜம்வால், மலாங்காவை சரமாரியமாக குத்துகளை விட்டு நிலைகுலையச் செய்தாா். 5 நடுவா்களில் 4 போ், ஜம்வாலின் முதல் மற்றும் மூன்றாவது சுற்று முடிவுகளை ஜம்வாலுக்கு சாதகமாக அறிவித்தனா்.
ஏற்கெனவே 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா். இறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் ஓடெல் கமாராவையும், ஜம்வால் உள்ளூா் வீரா் யுரி ரீஸையும் எதிா்கொள்கின்றனா்.
10 போ் இந்திய அணியில் 2 போ் இறுதிக்கும், 4 போ் அரையிறுதி வரையும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியை வோ்ல்ட் பாக்ஸிங் நடத்தி வருகிறது.