வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
பணிநீக்கம்: `நோட்டீஸ் காலம் முடிவதற்குள் அடுத்த வேலை..' - ஊழியர்களை நெகிழ வைத்த CEO
மனிதனுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் மனசாட்சி வெளியில் வரும்போது சில அதிசயங்களும் ஆச்சரியங்களும், வெளிப்படும் என்பதற்கு அண்மை உதாரணம் OkCredit நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷ் போகர்னா.
பெங்களுருவில் தான் நடத்தும் OkCredit நிறுவனத்தில் இருந்து பொருளாதார நெருக்கடி மற்றும் தவறான அணுகுமுறையின் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு 70 பேரை பணிநீக்கம் செய்துள்ளார் ஹர்ஷ் போகர்னா.
"பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நாங்கள் எந்தளவுக்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தோமோ, அதே அளவுக்கு மிக வேகமாக பல பேரை வேலைக்கு அமர்த்தினோம். இருந்த பரபரப்பில் முதலில் அது இயல்பாக இருந்தது.

பின்னர் வந்த பிரச்னைகளின் போது தான், எங்களது தவறை உணர்ந்தோம். ஒரு நிறுவனராக நான் செய்த மிக கடினமான விஷயங்களில் ஒன்று 70 பேரை பணி நீக்கம் செய்தது ஆகும்" என்று தனது லிங்க்ட் இன் பக்கத்தில் ஹர்ஷ் எழுதியுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து பேசி, அவர்களுக்கு பணி நீக்கம் சம்பந்தமான விளக்கம் அளிக்கப்பட்டது. இதை நிறுவனமே செய்தது.
இத்துடன் நின்றுகொள்ளாமல் ஹர்ஷின் நிறுவனமே, பிற நிறுவனங்களில் தங்களது ஊழியர்களுக்கான பரிந்துரைகள், அறிமுகங்கள் செய்துள்ளது. இதனால் 67 ஊழியர்களுக்கு அவர்களது நோட்டீஸ் காலம் முடிவதற்குள்ளேயே புதிய வேலை கிடைத்துவிட்டதாம். இதை ஹர்ஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மூலைக்கு மூலை அடிக்கடி பணிநீக்கம் செய்யப்படுவதை கேட்கும்போது பத்தோடு பதினொன்றாக தெரியும். ஆனால், தன் நிறுவனத்தால் பணி நீக்கம் செய்பட்டவர்களின் சூழலையை அறிந்து, அவர்களுக்கு புதிய பாதையை ஏற்படுத்திக்கொடுத்த ஷர்ஷ் போகர்னா நிச்சயம் ஆயிரத்தில் ஒருவர்.
"நீங்கள் ஒருவரை வேலைக்கு அமர்த்தும்போது 'குடும்பம்' என்று அழைத்தால், அவர்களை விடுவிக்கும்போதும் குடும்பத்தினரைப் போலவே நடத்துங்கள்" என்று கூறியுள்ள ஹர்ஷ் போகர்னா நிச்சயம் போற்றி பாராட்டப்பட வேண்டியவர் தான்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
