படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
ட்ரம்ப் அதிரடி... பங்குச் சந்தை இனி எப்படி போகும்? ஃபண்ட் நிபுணர் சுனில் சுப்பிரமணியம் விளக்கம்!
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் அதிரடி நடடடிக்கைகள் பலவற்றை எடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கும் இறக்குமதி வரியை ஏகத்துக்கும் உயர்த்தி, அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறார். டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கையினால் உலக அளவில் பங்குச் சந்தை கடும் இறக்கத்தைக்
கண்டு இருக்கிறது.

முக்கியமாக, ஹாங்காங் சந்தை 13.6%, தைவான் சந்தை 9.6%, ஜப்பான் சந்தை 9.5% என ஒரே நாளில் இறக்கம் கண்டது. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பங்குச் சந்தை 4.1% என்கிற அளவுக்கு மட்டுமே இறக்கம் கண்டதைப் பார்த்து இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆறுதல் அடையலாம்!
டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் தொடரும் இந்த நிலையில், இனி பங்குச் சந்தை எப்படிப் போகும், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இப்போது தங்களுடையை முதலீட்டு ஸ்ட்ராட்டஜியை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நஷ்டத்தைப் பெருமளவில் தடுக்கும் வழிகள் என்ன, கோல்டு சேவிங் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா என பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கவிருக்கிறார் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முன்னால் எம்.டி மற்றும் சி.இ.ஒ.-ஆன சுனில் சுப்பிரமணியம்.

''டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள்: பங்குச் சந்தை இனி எப்படிப் போகும்'' என்கிற தலைப்பில் விகடன் லாபம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஆன்லைன் கூட்டத்தில் சுனில் சுப்பிரமணியம் பேச இருக்கிறார். அனைத்து முதலீட்டாளர்களுக்கான இந்த விழிப்புணர்வு வெப்பினார் 9-ஆம் தேதி புதன்கிழமை மாலை 7 மணிக்கு நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்குச் சந்தையின் முதலீட்டுப் போக்கை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://forms.gle/5DKPafDqjXQc6xod8 என்கிற லிங்க்கை
தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 200 பேர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதால், உங்கள் பெயரை உடனே பதிவு செய்துகொள்வது நல்லது. இந்த லிங்க்கை கிளிக் செய்து பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பி
வைக்கப்படும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
