'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது...
`மராத்தியில பேசமாட்டாயா?' - `எக்ஸ்கியூஸ்மி வழிவிடுங்க' என ஆங்கிலத்தில் பேசிய பெண்களுக்கு அடிஉதை
மகாராஷ்டிராவில் சமீபத்தில் மராத்தி புத்தாண்டான குடிபாட்வா தினத்தன்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, `அலுவலகங்களில் பயன்பாட்டு மொழி மராத்தியாக இருக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து புனே அருகில் உள்ள லோனவாலாவில் மகாராஷ்டிரா வங்கிக்கு சென்ற நவநிர்மான் சேனா தொண்டர்கள், வங்கியில் அனைவரும் மராத்தியில் பேசவேண்டும் என்று மேலாளரிடம் மனு கொடுத்தனர்.
அந்நேரம் அங்கு வந்த மற்றொரு வங்கி ஊழியர், `இந்தி பேசுவதால் வங்கியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தார். இதனால் அந்த ஊழியரை நவநிர்மான் சேனாவினர் அடித்து வங்கி மேலாளர் அறையில் இருந்து வெளியில் தூக்கி போட்டனர். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ராஜ் தாக்கரே கட்சியினர் மராத்தியில் பேசவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

`மராத்தியில் பேசமாட்டாயா?'
இந்நிலையில் மும்பையின் புறநகர் பகுதியாக விளங்கும் டோம்பிவலியில் மராத்தி பேசாத பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். டோம்பிவலி மேற்கு பகுதியில் உள்ள பழைய டோம்பிவலியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் வழியில் நின்ற சிலரிடம் `எக்ஸ்கியூஸ்மி வழிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர்.
உடனே, `மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு எப்படி ஆங்கிலத்தில் பேசலாம்?’ என்று கூறி வழியை மறித்துக்கொண்டு நின்றவர்கள் அப்பெண்களிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பெண்களையும் அவர்கள் அடித்தனர்.
அப்பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயன்றனர். இந்த நிகழ்வு முழுக்க வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. இது குறித்து இரு பெண்களும் விஷ்னுநகர் போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை அந்தேரி பவாயில் உள்ள எல் அண்ட் டி கம்பெனி கேட்டில் பணியில் நின்றிருந்த வடமாநில வாட்ச்மென் ஒருவர் மராத்தி பேச தெரியாமல், மராத்தியை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டார். இதனால் நவநிர்மான் சேனாவினர் அந்த வாட்ச்மெனை அடித்து உதைத்தனர். வாட்ச்மென் மன்னித்துவிடுங்கள் என்று கூறியபடி கையெடுத்து கும்பிட்ட படி நின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மராத்திக்கு ஆதரவான செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்படி தனது கட்சியினரை ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.