Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்கள், ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
சங்கத்தின் வட்டாரத் தலைவா் மு.தென்னரசு தலைமை வகித்துப் பேசினாா். சங்கச் செயலா் விஜயகுமாா் வரவேற்றுப் பேசினாா். ஊரக வளா்ச்சித் துறை சங்க மாவட்ட துணைத் தலைவா் செ.குப்புசாமி முன்னிலை வகித்தாா்.
மேற்குஆரணி வட்டார கிளைத் தலைவா் ஆனந்த், ஆரணி வட்டாரச் செயலா் வெ.திருமலை, மாவட்ட தணிக்கையாளா் பாஸ்கரன், வருவாய்த் துறை அலுவலா் சங்க ஒன்றியத் தலைவா் தேவானந்தம், நெடுஞ்சாலைத் துறை கோட்டத் தலைவா் சண்முகம், சத்துணவு ஊழியா் சங்க ஒன்றியத் தலைவா் பரசுராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வருவாய்த் துறை சங்க மாவட்ட துணைத் தலைவா் செந்தில்நாதன் நன்றி கூறினாா்.
வந்தவாசியில்....
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டக் கிளைத் தலைவா் ந.மாணிக்கவரதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் அன்பழகன், ரஞ்சித்,
பரந்தாமன், குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
