செய்திகள் :

ரூ.7.79 கோடி வருமான வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் ஜூஸ் கடைக்காரர்!

post image

உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம் சராய் ரெஹ்மான் பகுதியில் வசிப்பவர் முகமது ரஹீஸ்(35). இவர் அலிகார் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.500 - 600 வரை சம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த 18 ஆம் தேதி வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோடீஸில், ரூ.7.79 கோடி வரி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது ரஹீஸ், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரஹீஸ் கூறுகையில், “இவ்வளவு வரி எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது. வயதான பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. தீபக் சர்மா என்ற மீது சந்தேக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தற்போது அதிகாரிகள் தேடி வருகின்றனர். விசாரணை இன்னும் நடந்து வருகிறது. மேலும் வரும் நாள்களில் கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் கும்பமேளா நடைபெற்ற 45 நாள்களில் ரூ.30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டிக்கு ரூ.12.80 கோடி வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிக்க: விருந்தானதா விக்ரமின் வீர தீர சூரன்? - திரை விமர்சனம்

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க