செய்திகள் :

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

post image

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்களின் சொத்துகளையும் பாதுகாப்போம் என்று உறுதியளித்துள்ளார்.

"வக்ஃப் சட்டத் திருத்தத்தினால் நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள், மேற்குவங்கத்தில் பிரித்தாளும் ஆட்சி இருக்காது. அனைவரும் ஒன்றாக இருப்போம். அரசியலுக்காக மக்களைத் தூண்டுபவர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாக வன்முறை நடைபெற்றது வருத்தமளிக்கிறது. வங்கதேச எல்லைப்பகுதி இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத சிறுபான்மையினர் உள்ளனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், மேற்குவங்கம் மற்றும் இந்தியா அனைத்தும் ஒன்றாகத்தான் இருந்தன. பின்னர்தான் பிரிவினை நடந்தது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய வேலை. மக்கள் ஒன்றாக இருந்தால், உலகையே வெல்ல முடியும்.

உங்களையும் உங்கள் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும் இந்த ஒற்றுமையிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது. அனைத்து மத, சாதியைச் சேர்ந்தவர்களும் மனித குலத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். நான் அனைத்து மத இடங்களுக்கும் சென்றுகொண்டிருக்கிறேன்" என்றார்.

வக்ஃப் திருத்த மசோதா

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. வக்ஃப் மசோதாவுக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி எனக் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார், ... மேலும் பார்க்க

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய... மேலும் பார்க்க

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க