செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கடகம்)

post image

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

கடகம் (புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன் - லாப  ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

26-04-2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026  அன்று சனி பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

இதயம் என்னும் கடலிலிருந்து அமுதமொழி பேசி அனைவரையும் தன் வசப்படுத்தும் கடகராசி அன்பர்களே!

திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை கூடும். குரு எந்த வகையிலும் நன்மையை மட்டுமே தருவார். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும்.  பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள்.  மருத்துவம் சார்ந்த தொழில் வகையில் புதிய மூலதனங்கள் எதையும் இப்போது முதலீடு செய்ய வேண்டாம். விவசாயத்தொழில் புரிபவர்கள் புதிய பயிர் வாய்ப்பு முறைகளை புகுத்தாமல் பழைய பாசன முறைகளையே பின்பற்றுங்கள்.

சாகசமான விளையாட்டு பயிற்சிகளை மேள்கொள்பவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். காவல்துறை, எல்லை பாதுகாப்பு, ராணுவம் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் தற்காப்பு வழிமுறைகளில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் அனுகூலம் மிகுதியாகவே உண்டு. ஏற்கனவே பெற்ற புகழுடன் புதிய புகழும் வந்து சேரும். ஆன்மீக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.

நண்பர்களின் உதவி நன்மை பயக்கும். ஆயுள் அபிவிருத்தி பெற நல்ல பழக்க வழக்கங்களையும் செய்வ வழிபாட்டையும் கடைபிடிப்பதுடன் தான தர்மம் செய்ய வேண்டும். தந்தை வழி சார்ந்த உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகளில் போட்டி பொறாமைகள் குறுக்கீடு செய்யும். கவனமுடன் செயல்படவும். பெண் தெய்வத்தின் அருள் தகுந்த நேரத்தில் காப்பாற்றும்.

உத்தியோகஸ்தர்கள்: அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறையில் உள்ளவர்கள் சிலரது அதிருப்திக்கு ஆளாகி பின்னர் சிறப்பாக பணிபுரிந்து நன் மதிப்பை பெறுவார்கள். அரசாங்கத்திடம் பாராட்டும் விருதும் கிடைக்கும். இளைய சகோதரர்கள் துணை நின்று பல்வேறு உதவிகள் புரிவார்கள்.

சுகபோக வாழ்க்கையில் ஈடுபாடு காட்டிய உங்கள் மனம் ஆன்மிக வழியிலும் சமூக நற்காரியங்களிலும் இனி ஈடுபாடு கொள்ளும். புத்திரர்கள் உங்கள் சொல்லைக்கேட்டு நடப்பதில் குறைபாடுகள் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை உயர்வாக இருக்கும். மனைவியின் வழியில் அதிர்ஷ்டங்கள் கைகூடும். பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. சேமிப்பு பணம் தகுந்த நேரத்தில் பயன்படும்.

தொழில்திபர்கள்: ஆஸ்பத்திரிகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வருபவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியும் புகழும் பெற பூஜைகளும் தான தர்மங்களும் செய்வதால் இருக்கும் புகழை நல்ல முறையில் பாதுகாக்கலாம். அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்பவர்கள் பயனீட்டாளர்களுக்கு நிறைந்த சலுகைகள் வழங்குவதன் மூலம் தங்கள் தொழிலை வளர்த்துக்கொள்வார்கள்.

தீப்பெட்டி தயாரிப்பு செய்பவர்கள், வாகனங்களுக்கு பாடி பில்டிங் செய்பவர்கள், வார்ப்பு சம்பந்தமான தொழில் வாய்ப்பு பெற்றவர்கள், வீடுகளுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை தயாரிப்பு செய்பவர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாமல் இருக்க குறைந்த லாபத்தை வைத்து தங்கள் தயாரிப்பு விற்பனை செய்யும் முடிவுக்கு வருவார்கள். அத்தியாவசிய பொருளாதார தேவைகளை வங்கிகள் மூலமாக பெறும் வழி உண்டு.

தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனமுடன் யெல்படுவது நல்லது. உடல் நலத்தில் சிறிய பாதிப்பு வந்தாலும் சிகிக்சை எடுத்துக் கொள்வது நலனைத்தரும். குடும்ப ஒற்றுமையில் கணவன் மனைவி இடையே குருவின் அனுகூலப்பார்வையால் மகிழ்ச்சி நிலவும். தந்தை வழி உறவினர்கள் அனுகூலமுடன் செயல்படுவார்கள்.

வியாபாரிகள்: ஓட்டல், பேக்கிரி, எண்ணெய், பலகாரம், ஐஸ்கிரீம் பார்லர், பிரட் விற்பனையாளர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்பவர்களின் தொழில் சிறந்து விளங்கி நிறைந்த பணவசதி பெறுவார்கள். விளையாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்களை பெற்று தொழிலில் சிறப்பு அடைவார்கள். தங்கள் நிறுவனத்தின் புகழை பரப்ப புதிய விளம்பர வியாபாரம் தொடர்பான வாகனங்கள் வைத்திருப்பாவர்கள், வாகன பராமதிப்புக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும். மறைந்திருந்து எதிரித்தனம் செய்பவர்களை இனம் கண்டு ஒதுக்கி விட வேண்டும்.  பொருளாதாரத்தில் லாபங்கள் திடீரென்று உருவாகும்.

மாணவர்கள்: மருத்துவம், கேட்டரிங், இன்ஜினியரிங், விவசாயம், உள்அரங்க வடிவமைப்பு கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறந்த கவனத்துடன் செயல்பட்டு தேர்ச்சி பெறுவார்கள். இது தொடர்பான கல்வி நிறைவு செய்தவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள். நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தினர் ஊக்கம் தருவார்கள். நல்ல புகழ் நற்செய்திகள் தானே தேடி வரும். பூர்வ புண்ணிய பலன்கள் தகுந்த நேதத்தில் கை கொடுக்கும். நல்ல உணவு பழக்கங்களை பின்பற்றுவதால் உடல் உபாதைபளிலிருந்து தப்பிக்கலாம்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார்க துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவிகள் மற்றும் வரவேண்டிய நிலுவைத்தொகைகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். அவர்களை இனம் கண்டு மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து தகுந்த நிவாரணம் பெறுவீர்கள். பணிச்மைகள் காரணமான மனக்குழப்பமும் துக்கமின்மையும் உண்டாகி பின்னர் சரியாகும்.  புத்திர பாக்கிய அமைப்பு அனுகூல நிலையில் உள்ளது. திருமணம் ஆன பெண்களுக்கு கணவராலும் அவர்தம் குடும்பத்தவராலும் நல்ல கவுரவமான நிலைகள் உருவாக்கித் தரப்படும். மாங்கல்ய ஸ்தாநம் பலம் பெற தகுந்த வழிபாடு பூஜைகளிலும் பங்கு பெறுவது மங்கள வாழ்வைத் தரும். தங்க நகைகளை தகுந்த பாதுகாப்புடன் அணிந்து கொள்வதால் வீண் பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.

கலைத்துறையினர்: கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பை செயல்படுத்தினால் மட்டுமே முன்னேற முடியும். வெளியுலக பிரச்னைகள் உங்களைத் துன்பப்படுத்தினாலும் உங்கள் மனைவியும் குடும்பத்தவரும் தகுந்த முறையில் ஆதரித்து உறுதுணையாக இருப்பார்கள்.

அரசயில்வாதிகள்: பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரை தற்காத்துக் கொள்வதற்கு இந்த வருடம் மிகவும் உதவி கரமாய் இருக்கும். அரசுக்கு சொந்தமான இடங்களை சட்ட விரோதமாக கையகப்படுத்தி பல காலம் பயன்பெற்றவர்கள் அரசின் முறையான நடவடிக்கைகளை எதிர்கொள்வர். அரசியல் ரீதியாக போட்டியும் பொறாமையும் உண்டாகி வழக்குகளும் பொருளாதார சிரமங்களும் உண்டாகும்.

 புனர்பூசம் 4

இந்த ஆண்டு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

பூசம்

இந்த ஆண்டு ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

ஆயில்யம்

இந்த ஆண்டு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவை  உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். 

பரிகாரம்

முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஷட் ஷண்முகாய நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க

காதலரைக் கரம்பிடித்தார் அபிநயா!

நடிகை அபிநயா தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈ... மேலும் பார்க்க