சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஜோபர் மற்றும் ராம் நகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்ட சூழல் நிலவுகிறது.
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் பிலாவர் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.