சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (ரிஷபம்)
தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
கிரகநிலை
ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - பஞசம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
26-04-2025 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்
வசீகரப் பார்வையும் அழகான தோற்றமும் இனிமையான பேச்சும் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே!
மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள்.நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் உடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும்.
புகைப்பிடித்தல் மதுகுடித்தல் போன்ற நச்சுத்தன்மை பொருந்தியவற்றை உபயோகப்படுத்துல் கூடாது. கணவன் மனைவி இடையெ ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
துந்தை வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாகும். இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். தொழில் கவனங்கள் சிதறுவதால் தற்காலிகமான வீழ்ச்சி ஏற்பட்டு பின்னர் நிலைமை சரியாகும்
உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தந்மை நிறந்த இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். அரசின் ஆதரவு நிலைப்பாடுகள் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.
வீடு மனைகள் வாங்கவும் அதனை அழகுபடுத்தவும் நல் வாய்ப்புகள் உண்டாகும். புத்திரர்கள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள். உடல் நலத்தில் பாதிப்பு வர வாய்ப்பு தெரிவதால் தகுந்த பயிற்சிமுறைகளும் மருத்தவ சிகிக்சை முறைகளும் பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு பெறலாம். வாழ்க்கைத்துணையின் மூலம் நற் பலன்கள் தர உள்ளதால் அவரது பெயில் புதிய சொத்து வாங்கும் யோகும் நிறைவாக உள்ளது.
குடும்ப ஒற்றுமை மேன்யைடையும். தந்தை வழி உறவினர்கள் தகுந்த உதவிகள் தருவார்கள். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டு. விஷ பிராணிகளிடம் விலகி இருத்தல் நலம். குல தெய்வ அருள் தகுந்த சமயத்தில் நல் வழிகாட்டும்.
தொழிலதிபர்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்கள் உள்பத்தி செய்பவர்கள் வீட்டு உபயோக பீங்கான் பொருட்களை தயாரிப்பவர்கள், தொழில் வளர்ச்சி பெறுவார்கள். தங்கும் விடுதிகள், சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ற தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். தொழில்நுட்ப படிப்பை கற்றுத்தரும் பயிற்சி நிறுவனம் நடத்துபர்கள் நிறைவான மாணவர் சேர்க்கையை பெற்று நிறுவனத்தை நன்று நடத்துவார்கள். விருதுகளும். பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள். நவரத்தின கற்களை விற்பனை செய்யும் தொழிலதிபர்கள், நகை மாளிகை உரிமையாளர்கள் விற்பனை பெருகி தொழில் வளம் பெறுவார்கள். மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள்
வியாபாரிகள்
விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். இருசக்கர நான்குசக்கர வாகன விற்பனையாளர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கம் கண்டு வியாபார உத்திகளை மாற்றி புதிய விற்பனை சந்தைகளை எட்டிப்பிடிப்பார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் பைசல் செய்யப்படும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் உங்கள் தொழில் சிறக்க தங்களின் பங்களிப்பை தருவார்கள். ஒய்வுக்குகூட நேர மின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள்.
மாணவர்கள்
இன்ஞினியரிங், வாகனங்களை பழுது நீக்கும் பயிற்சி, சமையற்கலை ஆகிய துறை சார்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான பொருளாதாரம் கிடைக்கப்பெற்று தகுதியான செலவுகளை செய்து நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாக்களில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியம் பெற முடியும். போக்குவரத்துகளில் தகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினர் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். கைத்தொழில் தொடர்பான பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சிக்குப்பின் உடனடி வேலைவாய்ப்பை பெறுவார்கள்
பெண்கள்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகி செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும், பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலும் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். புத்திரர்கள் வகையில் அனுகூலமான பலன்கள் உண்டு.
உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழலாம். விருந்தினர் வீட்டு உபசரிப்புகளை அளவான முறையில் ஏற்றுக்கொள்வது நலம். ஆயுள்ஸ்தானம் பகவானின் பர்வையால் வலம் பெற்று வருவது சிறப்பானதாக உள்ளது.
கலைஞர்கள்
சினிமா நாடகம் டிவி ஆகியவற்றில் நடிப்பு தொழிலை மேற்கொண்டு உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். சிற்பங்களை வடிவமைக்கும் தொழில் கலைஞர்கள் புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்று குறித்த காலத்தில் சிறப்பாக வேலை செய்து புகழும் பணமும் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும் பொருளாதார பசுமையும் பரிசும் பதக்கமும் பெறுவார்கள்.
திருமண வாய்ப்புக்கு காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. நண்பர்கள் வகையில் தகுந்த ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக எதிரித்தனம் செய்தவர்கள் இடம் மாறி போய்விடுவார்கள்.
அரசியல்வாதிகள்: மக்களுக்காக சேவை செய்வதில் சில காலம் மந்தமாக செய்பட்டு வந்வர்கள் எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் உள்ளவர்களாக நடந்து வந்நவர்களும் கூட தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருந்து செயல்படுவார்கள். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.
அரசியயலையும் தொழிலையும் இணைத்து ஒரிடத்தில் செயல்படுபவர்கள் நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்று தொழிலுக்காக புதிய கிளை ஒன்றை துவங்குவார்கள். பொருளாதார முன்னேற்றமும் நற்பெயரும் தானாக தேடி வரும். வீடு மனைகளில் அபிவிருத்தி பணிகள் நடக்கும். புத்திரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.
கார்த்திகை 2 - 3 - 4
இந்த ஆண்டு பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.
ரோகினி
இந்த ஆண்டு மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம் - 1, 2
இந்த ஆண்டு வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.
பரிகாரம்
அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வது.
மலர் பரிகாரம்: “தாமரை மலரை” பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6