செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மிதுனம்)

post image

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - பஞசம  ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில்  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - லாப  ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக  ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

26-04-2025 அன்று ராகு பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026  அன்று சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  அயன சயன போக  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தன்மையான குணத்தால் விட்டு கொடுத்து வாழ்ந்து வெற்றியை பெற்று வரும் மிதுனராசி அன்பர்களே!

செயல்படாமல் மூடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும்  நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருச்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். அரசுத்துறைகளின் ஆதரவும் தேவையான காலங்களின்  கிடைக்கும். உங்கள் வீட்டில் ஆன்மிகப் பணிபுரியும் அன்பர்களும் தெய்வீகத் தன்மை பொருந்திய சாதுக்களும் வந்து அருளும் மார்க்கம் நிரம்ப உண்டு.

உங்கள் இல்லம் குருவருள் நிறைந்து காணப்படும்.  குல தெய்வ வழிபாடுகளும் தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய நேர்த்திகடன்களும் நிறைவேற்ற வாய்ப்பு  வரும்.

கடன் வழக்கு போன்றவைகள் வரும் வாய்ப்புகள் உள்ளதால் செலவினங்களை கட்டுக்குள் வைப்பது நலம். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல  பயன்கள் உண்டாகும். நோய்நொடி இல்லா சுகஜீவன வாழ்க்கை அமையும்.  தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி உண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.  தாய்வழி சார்ந்தவர்கள் வாழ்வின் வெற்றிக்கு உறுதுணை புரிவார்கள். நீதித்துறை சார்ந்த பணி புரிவோர் ஏற்றம் பெறுவர்.

பாங்க் மற்றும் நிதிநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சிறப்பு பெறுவார்கள்.  பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு, தொழில் ஸ்தானம் சிறப்பான பலன் பெறும்.   மூத்த சகோதர வகை இனங்கள் உங்கள் கருத்துகளுக்கு எதிரான வகையில் செயல்படுவார்கள் அலுவலகப் பணி நித்தமான வெளிநாடு சென்று திரும்பும்  யோகம் சிருக்கு உண்டு.

 உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். செயல்பாடுகளில் தனித்த திறமையும்  நண்பர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து மிகுந்த வெற்றி தரும்.

 பகட்டான செயல்களுக்காக பணத்தை விரயமாக்கும் நிலைகள் குடும்பத்தவரால்  உருவாக்கப்படும். கவனமுடன் செயல்பட்டால் சிரமமின்றி இருக்கலாம். கணவன் மனைவி ஒற்றுமை மனமகிழ்வைத் தரும். நல்ல பழக்கங்களுடன்  முன்மாதிரியாக திகழ்ந்து ஆயுள் ஆரோக்கியத்தை அபிவிருத்தி பெறச் செய்யும் வகையில் குருவின் பார்வை உள்ளது.

 தந்தை வழிச்சார்ந்த உறவினர்களில் உங்கள் தகுதிக்கு குறைவானவர்கள் மறைந்திருந்து கெடுதல் செய்ய முயற்சிப்பார்கள். சரியான நேரத்தில் கவனம் செலுத்தி  அநேக முயற்சிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தியும் நற்பெயரும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் சொன்ன வார்த்தையை மீறி நடந்து தங்கள்  சொந்த முயற்சிக்காக வெளிநாடு செல்வார்கள்.

 தொழிலதிபர்கள்: தங்கநகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிலதிபர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப  பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள்.  கல்வித்துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்ளை வைத்து நடத்துபவர்கள் நிறைந்த மாணவர்களைப்  பெற்று தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து பெயரும் புகழும் அடைவார்கள் மலர் சார்ந்த நறுமணப்பொருள் உற்பத்தியாளர்கள் அதிக லாhபம் பெற்று நன்மை  அடைவார்கள். சமூ நற்காரியங்களில் ஈடுபடும் மனப்பாங்கு உண்டாகும். வீடு மனையில் தெய்வத்தன்மை நிறைந்து மன மகிழ்வைத் தரும். புத்திரர்கள் ஏட்டிக்கு  போட்டியாக செயல்படுவார்கள் அவர்களளை பொறுமையாக வழி நடத்துங்கள் ஆய்ள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.

தந்தை வழி உறவுமறைகள் மனச்சங்கடத்தை உண்டு பண்ணும். தோழில்துறையில் புதிய கிளைகள் மற்றும் இட விஸ்தரிப்பு நிகழும். வெளிநாடு சுற்றுலா  செல்ல மார்க்கங்கள் உண்டு.

வியாபாரிகள் பித்தளை எவர்சில்வர் அலுமினியம் போன்ற உலோகம் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை விற்வனை செய்பவர்கள் வியாபாரத்தில் உயர்வு  பெறுவார்கள். சினிமா அரங்குகள் நாடக மேடைகள் திருமண மாளிகைகள் போன்றவற்றை அலங்கரிக்கத் தேவையான காகிதப்பூ வேலைப்பாடு நிறைந்த  பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.

 தங்க நகை கவரிங் பிளாஸ்டிக் அணிகலன்கள் விற்பனை செய்பவர்கள் மேன்மை அடைவார்கள். உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்களை விற்பவர்கள்  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை பெறுவார்கள். புத்தகம் விற்பனை செய்பவர்கள் தொழிலில் ஏற்றம் பெறுவார்கள். ஐந்தாம் ராசியில் சனி உள்ளதால்  உங்கள் செயல்பாடுகளில் சிறிது சுணக்கம் இருக்கும்.

 உங்கள் இல்லத்தில் தெய்வவழிபாடுகள் நிறைந்து இருக்கும். புத்திரர்கள் கவனக்குறைவுடன் செயல்படுவார்கள். முன்னெச்சரிக்கையுடன் அவர்களை வழி நடத்த  வேண்டும். தேவையற்ற செலவுகளால் மனம் ஈடுபடும். தகுதியறிந்து செயல்படவும்.

 மாணவர்கள்: குருகுலக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் குருவை போற்றி நடந்து அவர்தரும் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர  மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர். யோகாசனப் பயிற்சியை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயர்  பெறுவார்கள்

 வக்கீல் தொழிலில் ஜூனியராக இருந்து பயிற்சி பெறும் மாணவர்கள் தகுந்த சமயத்தில் சட்ட நுணுக்கங்களை அறிந்து சீனியர் வக்கீல்களிடம் நற்பெயர்  அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.

 உடல் நலத்தில் கவனம் வேண்டும். ஆயுள் பலம் அதிகம் உண்டு தனித்தொழில் துவங்கும் தகுதி கிடைக்கும். நண்பர்களுடன் சுற்றுலா வாய்ப்புகள் ஏற்பட்டு  மனமகிழ்வைத் தரும். தாயின் ஆதவும் தந்தையின் நியாயமான கண்டிப்பும் உங்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும். குலதெய்வ அருள் தகுந்த சமயத்தில்  துணை நிற்கும்.        

  பெண்கள்: அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள்  புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து நிறைவான வகையில் சத்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த  பொருட்களை கைவேலைப்பாடு மூலம் உருவாக்கும் பெண்கள் நிறை வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை  பலப்படும். தாய் தந்தை உதவிகள் தேவையான போது கிடைக்கும். கைத் தொழில் வாய்ப்புகளினால் மேன்மை பொறுவார்கள் ஆடை ஆபரணச் சேர்க்கை  குருவருளால் மன மகிழ்வைத்தரும்.

 கலைத்துறையினர்: தங்கநகை செய்யும் கலைஞர்கள் நிரம்பிய தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள்.  சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் போன்ற துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான ஆடம்பர விஷயங்கள்  போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.

 புதிய வேலை வாய்ப்பு ஒப்பந்தங்கள் பெற்று செய்யும் தொழிலை தெய்வமென மதித்து ரசிகர்கள் மத்தியில் தனித்த புகழை பெறுவார்கள். நண்பர்கள் உதவியும்  தக்க சமயத்தில் துணை நிற்கும். பெண் கலைஞர்கள் திருமண விஷயங்களை சில காலம் தள்ளிப்போடுவது நன்மை தரும். தங்கள் திறமை பரிமளித்து  விருதுகளும் சன்மானமும் பெறுவார்கள்.

 அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகளோடு தங்கள் வாழ்க்கைக்கு தேவையான சுக சவுகரியங்களைப் பெற  வேண்டிய ஏற்பாடுகளையும் செயல்படுத்துவீர்கள்.  உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாகக்  கருதப்பட்டு உடனடியாக நிறைவேற்றி தரப்படும். கோயில் சார்ந்த திருப்பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு தெய்ற  அருளையும் பெறுவார்கள். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்பட்டு எதிரித்தனம் செய்வர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதே உங்களுக்கு முன்னேற்றமான பாதைக்கு வழிவகையாய்  அமையும். அரசியல் ரீதியாக முக்கிய பொறுப்புகள் ஏற்கும் முன்னேற்ற நிலை உண்டு.

மிருகசீரிஷம் - 3, 4:

இந்த ஆண்டு லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள்.

திருவாதிரை:

இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

புனர்பூசம் - 1, 2, 3:

இந்த ஆண்டு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பரிகாரம்

சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ’ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்’ அன்றாடம் பாராயணம் செய்வது.

மலர் பரிகாரம்: “மரிக்கொழுந்து மலரை” ஏதேனும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கும் லக்ஷிமிக்கு சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க