செய்திகள் :

மறுவெளியீடாகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

post image

நடிகர் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மறுவெளியீடாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின், ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா என பல காதல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமானார்.

2000-களின் துவக்கத்தில் அஜித்துக்கு நிறைய வெற்றிப்படங்கள் அமைந்தாலும் அதில் தனித்துவமான படமாகப் பார்க்கப்படுவது இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்தான்.

2000-ல் வெளியான இப்படத்தில் அஜித்துடன் மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்காக பாடகர் ஷங்கர் மகாதேவன் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை வென்றார்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில் , இப்படம் இந்தாண்டுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதால் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதியில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ரீ- மாஸ்டர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: 15,000 பேர்! அரசு வேலைக்கு இணையான விண்ணப்பங்கள்... டிராகன் இயக்குநர் அதிர்ச்சி!

எம்புரான் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

எம்புரான் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சன... மேலும் பார்க்க

சச்சின் திரைப்படம் நாளை மறுவெளியீடு!

விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். ஜெனிலியா, வடிவே... மேலும் பார்க்க

சூரியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் சூரி நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுதலை படத்திற்குப் பிறகு முழுநேர கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் சூரி. அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 ஆகிய படங... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜ... மேலும் பார்க்க