Jailer 2: ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறேனா? - சிவராஜ்குமார் சொன்ன அப்டேட்
நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
'ஜெயிலர்' படத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதை நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்," 'ஜெயிலர் 2' படத்தில் எனக்கான காட்சிகளுக்கான ஷுட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சின்ன ரோலில்தான் நடித்திருந்தேன்.
நெல்சன் முழு கதையும் சொன்னார். ஆனால் அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். ரஜினிகாந்த் சார் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்பதால்தான் நான் இந்தப் படத்தில் நடித்தேன்.

அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தற்கான காரணம் எனக்கே தெரியவில்லை. என் நண்பர்கள் என்னை அழைத்துப் பாராட்டினார்கள். ஆனால் நான் ஒரு சிகரெட்டுடன் தான் நடந்து வந்தேன். வேறு எதுவும் பண்ணவில்லை.
என் மனைவிக்கூட 'அப்படி என்ன நீங்கள் இந்தப் படத்தில் செய்திருக்கிறீர்கள்' என்று கேட்டார். இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததற்கு நெல்சனிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...