செய்திகள் :

`இது ஆனந்தம் விளையாடும் வீடு!’ - நடிகை ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ

post image

சில குடும்பங்களைப் பார்க்கையில், அவர்களிடம் பேசுகையில் அவர்களுடைய பாசிட்டிவிட்டி நம்மையும் தொற்றிக்கொள்ளும். 'சேரன் பாண்டியன்' புகழ், நடிகை ஶ்ரீஜா சந்தன பாண்டியனின் குடும்பத்தைப் பார்க்கையில், அவர்கள் பேசுவதை கேட்கையில் நமக்கு அப்படித்தான் தோன்றியது.

ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ
ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ

''எங்க பையன் சிபிநாயகம் பிறந்தப்போ இவர் அவனை கீழேயே வைக்க மாட்டார். எப்பவும் கையிலேயே தான் வைச்சிருப்பார். நைட்ல அவன் முழிச்சிக்கிட்டா, இவர்தான் தோள்ல போட்டுட்டு ஊஞ்சல்ல உட்கார்ந்துட்டு ஆடிட்டே இருப்பார். அவன் கொஞ்சம் வளர்ந்தப்புறமும் நைட்ல கதை சொல்லி தூங்க வைச்சதும் இவர்தான்'' என ஶ்ரீஜா பெருமையாக சொல்ல, சந்தன பாண்டியன் தொடர்ந்தார்.

''அவனுக்கு கதை சொல்ல, அவனே எனக்கு லீட் எடுத்துக்கொடுப்பான். அப்பா ஒரு ஊர்ல ஒரு சிங்கம், ஒரு புலின்னு அவன் ஆரம்பிச்சா, அதை வெச்சுதான் அன்னிக்கு நான் கதை சொல்லணும். இது அப்படியே டெவலப் ஆகி வளர்ந்தப்புறம் நானும் சிபியும் சினிமா பத்தி நிறைய டிஸ்கஸ் செய்ய ஆரம்பிச்சோம். மத்தபடி அவன் அம்மா செல்லம்தான். எங்க பையனுக்கும் பொண்ணுக்கும் 10 வயசு வித்தியாசம். பொண்ணு ஶ்ரீ லஷ்மி பிறக்கிற வரைக்கும், ஶ்ரீஜா தான் சிபிக்கு சாப்பாட்டு ஊட்டுவாங்க'' என்று சிரிக்கிறார்.

ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ
ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ

''ஆமா, நான் பிரேக் ஃபாஸ்ட் ஊட்டுவேன். இவர் ஸ்கூலுக்கு லன்ச் எடுத்துட்டுப்போய் ஊட்டி விட்டுட்டு வருவார்'' என்று கணவரைக் கிண்டலடிக்கிறார் ஶ்ரீஜா.

அடுத்து சிபி பேச ஆரம்பித்தார். ''அப்பா சினிமா பத்தி டெக்னிக்கலா நிறைய பேசுவார். என்னோட டைரக்டர் கனவுக்குக் காரணம் அப்பா தான். லயோலாவுல யூ.ஜி. படிச்சேன். மாஸ்டர்ஸ் சினிமா தான்னு முடிவு பண்ணிட்டு ஃபாரின் போயிட்டேன். காலேஜ் முடிச்சதும் சில மாசம் டைரக்டர் சுதா கொங்கரா மேம் கிட்ட வேலைபார்த்தேன். இறுதிச்சுற்றுக்கு சப் டைட்டில் செய்யுன்னு கூப்பிட்டாங்க. ஒரு வாரம்கூடவே இருந்து செஞ்சு கொடுத்தேன்.

அதுக்கப்புறம் என்கூட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கிறியான்னு கேட்டாங்க. அவங்களோட அஞ்சு குறும்படம், சூரரைப்போற்று படத்தோட ஆரம்பக்கட்டம்னு வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் ஹையர் ஸ்டடிக்காக ஃபாரின் போயிட்டேன்.

ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ
ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ

சுதா கொங்கரா மேம், எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. எங்கம்மா மாதிரியே நான் ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ். அம்மா சர்க்கரை கொடுத்து பழக்கப்படுத்ததால ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது. எப்பவாவது ஒண்ணுதான் சாப்பிடுவேன். ஒருநாளைக்கு ரெண்டு வேளைதான் சாப்பிடுவேன். இந்தியாவுக்கு வந்தா வீட்ல இருந்து பெசன்ட் நகர் வரைக்கும் நடப்பேன். என்னோட இயல்புபத்தி சுதா மேமுக்கு தெரியும்கிறதால, அவங்க கிட்ட நான் அசிஸ்டென்ட்டா இருந்தப்போ எனக்காக அவங்களே சமைப்பாங்க.

காலையில அஞ்சரை மணிக்குப் போனா நைட் ஏழு மணி வரைக்கும் வேலை பார்ப்பேன். அதுக்கு மேல வேலையிருந்தா பிரியாணி ஆர்டர் பண்ணிடுவாங்க. ஏன்னா, ஐ லவ் பிரியாணி'' என்று சிரிக்கிற சிபி, தற்போது ஹாலிவுட்டில் முஃபாசா (த லயன் கிங்) படத்தின் டெக்னிக்கல் சைடில் பணிபுரிகிறார்.

அண்ணன் செல்லம்

ஶ்ரீஜா - சந்தன பாண்டியன் மகள் ஶ்ரீலஷ்மி எம்.ஓ.பி வைஷ்ணவாவில், ஜர்னலிசம் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருக்கிறார்.

ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ
ஶ்ரீஜா சந்தன பாண்டியன் ஃபேமிலி இன்டர்வியூ

''எல்லார் வீட்லேயும் அம்மா, அப்பா மட்டும்தான் செல்லம் கொடுப்பாங்க. ஆனா, ஶ்ரீலஷ்மிக்கு எங்களோட சேர்ந்து அவளோட அண்ணனும் செல்லம் கொடுப்பான். இவளை ஒரு வார்த்தை திட்ட முடியாது. இதுவரைக்கும் ஒரு அடிகூட வெச்சதில்லைன்னா பார்த்துக்கோங்க'' என்று பிள்ளைகளின் பாசம் குறித்து பெருமையுடன் பேசுகிறார் ஶ்ரீஜா.

''பட், சாட்டிங்ல நாங்களும் வழக்கமான அண்ணன், தங்கச்சி மாதிரி சண்டை போடுவோம்'' என்கிற ஶ்ரீலஷ்மியிடம், அவருக்குப் பிடித்த இசைப்பற்றிக் கேட்டோம். ''அப்பாவுக்கு எம்.ஜி.ஆர் பாட்டுப் பிடிக்கும். அம்மாவுக்கு இளையராஜா சார் பாட்டுதான் பிடிக்கும். அம்மா கார்ல இருந்தா, இளையராஜா பாட்டைத்தவிர வேற மியூசிக்கே பிளே பண்ண முடியாது. இந்தப் பாட்டெல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கும் இதுவே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு'' என்று சிரிக்கிறார்.

அவங்க இயல்போட அப்படியே ஏத்துக்கிறோம்

'உங்க மகன் தமிழ்ல ஒரு படம் டைரக்ட் பண்ணா நடிப்பீங்களா' என்றோம் ஶ்ரீஜாவிடம். அம்மா பேசுவதற்குள் சிபி முந்திக்கொண்டு, ''அம்மா ரொம்ப டேலன்ட். ஏன் நடிக்கிறதை நிறுத்திட்டீங்க நிறைய தடவை கேட்டிருக்கேன். எனக்காக அம்மா ஒரு படம் நடிச்சா நல்லாயிருக்கும்'' என்கிறார். ''எனக்கு கதை புடிச்சா நடிப்பேன்'' என்கிறார் ஶ்ரீஜா.

ஒரு குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னா என்ன செய்யணும் என்றோம். ''நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் பாசமா இருக்கோம். ஒருத்தரையொருத்தர் அவங்க இயல்போட அப்படியே ஏத்துக்கிறோம். எங்களுக்குத் தெரிஞ்சது இதுதான்'' என்கிறார்கள் ஒரே குரலில்.

ஆனந்தம் விளையாடும் வீடு.

Jailer 2: ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கிறேனா? - சிவராஜ்குமார் சொன்ன அப்டேட்

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர... மேலும் பார்க்க

Yogi babu: உண்மைச் சம்பவக் காதல் கதையில் யோகி பாபு; நடிகராகும் இயக்குநர் லெனின் பாரதி

அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு தொடங்கியிருக்கிறது.இப்படத்தை தேவி சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. யோகி பாபுஇத்திரைப்படத்தின் கதை ஒரு உண... மேலும் பார்க்க

Rambha Exclusive: "அழகிய லைலா... அவள் இவளது ஸ்டைலா!" - நடிகை ரம்பா க்ளிக்ஸ் | Photo Album

“பொறுமையா இருக்க முடியாது, மரியாதை கொடுக்க முடியாதுன்னா... கல்யாணமே பண்ணிக்காதீங்க!” - நடிகை ரம்பாசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பா... மேலும் பார்க்க