செய்திகள் :

வாழைப்பழத்தோல் போன்றது சநாதனம்: பேரவையில் சேகர்பாபு பேச்சு

post image

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தோல் போன்றதுதான் சநாதனம் என்று கூறினார்.

தமிழக நிதிநிலை கூட்டத் தொடரில் இன்று மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இன்றைய கூட்டத் தொடர் நடவடிக்கையின்போது, பேசிய அமைச்சர் சேகர்பாபு, வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சநாதனம், அதனுள் இருக்கும் பழமே இறைவன். எவ்வாறு வாழைப்பழத் தோலை உரித்துவிட்டு பழத்தை சாப்பிடுகிறோமோ அதுபோலத்தான், சநாதனத்தை ஒதுக்கிவிட்டு இறைவனைக் காண முடியும் என்று தெரிவித்தார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய அதிமுக எம்எல்ஏ முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை தவறாக உள்ளது என்று கூறினார். சநாதனத்துக்கும் வாழைப்பழத் தோலுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும் வாழைப்பழமும் ஒன்று என்றால் இவ்வளவு பெரிய விவாதம், வழக்குகள் தேவையில்லை என்றார்.

அறிவியல், தொழில்நுட்பத்தால் புதிய வகை மனித உரிமைகள்: வெ. ராமசுப்பிரமணியன்

தஞ்சாவூா்: அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாக புதிய வகை மனித உரிமைகள் உருவாக்கியுள்ளன என்றாா் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியுமானவெ. ராமசுப்பிரமணியன்.... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.தேர்ச்சி ... மேலும் பார்க்க

சிறை நிரப்பும் போராட்டம்: ஓய்வூதியதாரா் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தெரிவித்தாா். தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வா் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த குறுகிய கா... மேலும் பார்க்க

மின்வாரியம் தனியாா்மயமாகாது: அமைச்சா் செந்தில் பாலாஜி உறுதி

தமிழ்நாடு மின்வாரிய நடவடிக்கைகளில் தனியாருக்கு இடமில்லை என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா். பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானிய... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஆறு கட்ட போராட்டம்: காங்கிரஸ்

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை சத்யமூா்த்தி பவனில் தமிழ்நாடு ... மேலும் பார்க்க