சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு...
"யாராவது என்னை எச்சரித்து இருந்தால்..." தாய்லாந்துக்கு சென்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்தது என்ன?
தாய்லாந்தின் பிரபலமான கடற்கரையில் குளித்த சுற்றுலா பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
பொதுவாக தங்களின் விடுமுறை நாட்களை மறக்க முடியாத அனுபவமாக மாற்றவும், சாகசங்கள் நிறைந்த தருணங்களாக மாற்றவும் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் செல்லும் இடங்களில் ஆர்வத்துடன் சிறிது கவனத்துடனும் இருப்பது அவசியமாகிறது.
சுற்றுலா இடங்களுக்கு நாம் திட்டமிட்ட செல்கிறோம். ஆனால் சில நேரங்களில் திட்டமிடப்படாத விஷயங்கள் நடைபெறுகின்றன. அதுபோன்றுதான் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு நடந்துள்ளது. சமீபத்தில் தாய்லாந்துக்கு சென்ற ஆஸ்திரேலியா பெண், நோய்வாய்பட்டிருக்கிறார்.

யாராவது என்னை எச்சரித்து இருந்தால்..!
தாய்லாந்தின் ஃபி ஃபை தீவுகளில் அமைந்துள்ள பிரபலமான ”மங்கி பே” கடற்கரைக்கு அந்த பெண் சென்றுள்ளார். இங்கு அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் வருவதால், இப்பேரை இந்த கடற்கரை பெற்றுள்ளது.
மங்கி பே, கடற்கரையில் நீந்தும்போது, அந்தப் பெண் தற்செயலாக சிறிது நீரை உட்கொண்டுள்ளார். இது கடுமையான தொற்றுக்கு வழிவகுத்துள்ளது. இந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ளவும், தாய்லாந்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டதாக தெரிவித்தார்.
”ஆழமற்ற கடற்கரைகளில் அல்லது கடற்கரை ரீதியான பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். நான் குரங்கு கடற்கரையில் சிறிது தண்ணீரை உட்கொண்டுவிட்டேன் இதனால் எனக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுவிட்டது. யாராவது என்னை எச்சரித்து இருந்தால் நன்றாக இருக்கும். அதனால் தான் நான் உங்களை எச்சரிக்கின்றேன். என்னை போல் யாரும் ஆகிவிடக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தாய்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்று, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எந்த வகையான நீரிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு இருபது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. அந்த பெண்ணின் அனுபவம் குறித்து பகிர்ந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அதில் ஒரு பயனர் " நானும் தாய்லாந்தை சேர்ந்தவன் உள்ளூர்வாசிகளுக்கென சில நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. இதனால் எங்களால் கடற்கரையில் நீந்தவும் எதையும் சாப்பிடவும் முடியும் ஆனால் இங்கு வந்த எனது நண்பனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உள்ளூர் பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிப்பதில்லை. மாறாக வெளிநாட்டிலிருந்து இங்கு வருபவர்களுக்கு அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி இல்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார். பலரும் இந்த பதிவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.