செய்திகள் :

பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

post image

பெஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஜம்முவில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தர பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 28 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் ஆகும்.

இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்திய நிலையில், பயணத்தை பாதியில் முடித்துவிட்டு புதன்கிழமை காலை நாடு திரும்பினார்.

பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!

பின்னர், பெஹல்காம் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்பட மோடி, தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீநகருக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்க்கிழமை காலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், அனந்த்நாக் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்ற நிகழ்வில் இறந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது, மேலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உள்பட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பெஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஜம்முவில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாஜக தலைவர்களுடன் சேர்ந்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒற்றுமையையும், தாக்குதலைக் கண்டித்தும், அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தேசிய சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், சுருக்கெழுத்தர் வேலை

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க

ஆப்கன் மக்களுக்கு 4.8 டன் தடுப்பூசிகளை அனுப்பிய இந்தியா!

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சுமார் 4.8 டன் அளவிலான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை வெளியிட்ட போப் பிரான்சிஸின் இறப்புக்கான இரங்கல் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் மார... மேலும் பார்க்க

ஆசிரியர்கள் போராட்டம்... நெல்லையில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியது

நெல்லை ரோஸ்மேரி பள்ளியில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தால் விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்த... மேலும் பார்க்க

'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி! - உதயநிதி ஸ்டாலின்

'நான் முதல்வன்' திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் இந்தாண்டு தமிழக மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வி... மேலும் பார்க்க

கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி அம்மன் கோயில் பங்குனித்திரு விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப்போட்டி புதன்கிழமை நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டிப் போட்டியை இலுப்பூர் வர... மேலும் பார்க்க