செய்திகள் :

ஆப்கன் மக்களுக்கு 4.8 டன் தடுப்பூசிகளை அனுப்பிய இந்தியா!

post image

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சுமார் 4.8 டன் அளவிலான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்திய அரசின் சார்பில் 4.8 டன் அளவிலான தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேபிஸ், டெட்டனஸ், ஹெபாடிட்டிஸ் பி மற்றும் இன்புளூயன்சா உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த உதவிக்காக ஆப்கானின் பொது சுகாதாரத் துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

ஆப்கானின் சுகாதாரத் துறை இந்தியா அனுப்பிய தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாகவும், இந்த உதவியானது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த உதவியின் மூலம் கடுமையான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் அத்தியாவசிய மருத்துவத் தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் துபையில் ஆப்கானிஸ்தானின் இடைக்கால வெளியுறவுத் துறை அமைச்சரான மவ்லாவி அமீர் கான் முத்தாகியுடன் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில் ஆப்கனுக்குத் தேவையான மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்தியா மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட... மேலும் பார்க்க

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப்... மேலும் பார்க்க

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர். நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!

இஸ்ரேலின் வெளியுறவுத் துறை வெளியிட்ட போப் பிரான்சிஸின் இறப்புக்கான இரங்கல் பதிவானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ் மார... மேலும் பார்க்க