டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44-ஆக முடிவு!
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.
வட்டி விகிதங்களைக் குறைக்காததற்காக ஃபெட் தலைவர் ஜெரோம் பவலுக்கு எதிரான விமர்சனங்களை தீவிரப்படுத்திய பல நாட்களுக்குப் பிறகு, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஃபெட் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கான அச்சுறுத்தல்களிலிருந்து டிரம்ப் பின்வாங்கிய பிறகு, சந்தை உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே வேளையில், சீனாவுக்கு எதிரான வரிகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் டிரம்ப் சமிக்ஞை செய்துள்ளார்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.24 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது குறைந்தபட்சமாக ரூ.85.52 ஐ தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் சரிந்து ரூ.85.44 ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.19-ஆக இருந்தது.
இதையும் படிக்க: டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு