பெஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!
புதிய அப்பாச்சியை அறிமுகம் செய்த டிவிஎஸ்!
இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜென்-2 ரேஸ் கணினி, 8-ஸ்போக் அலாய்ஸ் சக்கரங்கள், 4 வால்வு என்ஜின், 6 கியர்கள் வசதிகளுடன் இந்த மாடல் புதிப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 215 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்னரிங் டிராக் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு விதமான டிரைவிங் மோட் வசதியுடன் சந்தைக்கு வந்துள்ளது.
அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் பைக்கின் ஷோ ரூம் ஆரம்ப விலை ரூ. 2.8 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை
சிவப்பு நிறம் (குயிக் ஷிப்டர் இல்லாமல்) - ரூ. 2.8 லட்சம்
சிவப்பு நிறம் (குயிக் ஷிப்டருடன்) - ரூ. 2.95 லட்சம்
பாம்பர் கிரே நிறம் - ரூ. 3 லட்சம்
தற்போது ஷோ ரூம்களில் முன்பதிவு தொடங்கியுள்ளது.