செய்திகள் :

தங்கம் விலை அதிரடியாக ரூ. 2,200 குறைவு!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 23) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 அதிரடியாக உயர்ந்து முதல்முறையாக ரூ. 74 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று காலை மீண்டும் கிராமுக்கு ரூ. 275 குறைந்து ரூ. 9,015-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு குறைந்து ரூ. 72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாலரின் மதிப்பைக் குறைக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இந்நிலை நீடிக்கிறது.

இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளியை பொறுத்தவரை மாற்றமின்றி தொடர்ந்து கிராம் ரூ. 111 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,11,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : காஷ்மீர் தாக்குதல்: பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் மோடி!

கூகுள் பிக்சல் 9ஏ அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

கூகுள் பிக்சல் வரிசையின் 9ஏ மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கூகுள் நிறுவனம் பிக்சல் வகை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பிக்சல் 9 மாடலின் அடுத்... மேலும் பார்க்க

புதிய அப்பாச்சியை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

இரு சக்கர வாகனத்தில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அப்பாச்சி ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.டிவிஎஸ் அப்பாச்சி மாடல் பைக் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறி... மேலும் பார்க்க

அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்ட... மேலும் பார்க்க

டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!

டாடா கம்யூனிகேஷன்ஸ் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,040 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதன் முந்தைய மூன்று மாதங்களை விட 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. அதே வேளையில் அதன் வ... மேலும் பார்க்க

பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ! இந்தியாவில் கிடைக்குமா?

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கிடைக்ககூடிய ஸ்மார்ட்போனாக உள்ளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் தற்போது அறி... மேலும் பார்க்க

நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக மாறிய ஹெச்டிஎஃப்சி வங்கி!

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ரூ.15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், நாட்டில் மூன்றாவது பெரிய இந்திய நிறுவனம் என்ற பெருமையை தட்டி சென்றது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்று... மேலும் பார்க்க