பெஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை ஓட்டி மரணம்!
பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து!
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது ஆயுதமேந்தி இந்தப் பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 உள்நாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப். 24) கான்பூர் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கான்பூரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி கான்பூர் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.