செய்திகள் :

பெஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது! - விராட் கோலி

post image

பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள பதிவில், “பெஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:பெஹல்காம் தாக்குதல்: ஐபிஎல்லில் மௌன அஞ்சலி செலுத்த ஏற்பாடு! - பிசிசிஐ

பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!

பெஹல்காம் தாக்குதலில் பலியான இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி கிளை மேலாளரை மண்டியிடச் செய்து இஸ்லாமிய வாசகங்களை கூற பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகர... மேலும் பார்க்க

பெஹல்காம்: 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்!

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் தில்லி திரும்பினர்.ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து!

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை சொன்னது என்ன?

பெஹல்காம் தாக்குதல் கவலை அளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை இரங்கல் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ... மேலும் பார்க்க

பாஜகவின் வெறுப்பு அரசியலே பெஹல்காம் தாக்குதலுக்குக் காரணம்: சஞ்சய் ராவத்

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம் என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய சஞ்... மேலும் பார்க்க

பெஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியீடு!

பெஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கண... மேலும் பார்க்க