சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு...
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லாவின் உரி நாலாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு அடுத்த நாளான புதன்கிழமை காலை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை