பெஹல்காம் தாக்குதல்: ஐபிஎல்லில் மௌன அஞ்சலி செலுத்த ஏற்பாடு! - பிசிசிஐ
`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்
ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.
இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனீமூன் திட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார்.
ஆனால், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் இந்தக் கொலை சம்பவம் அவரின் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய அவரின் உறவினரான நரேஷ் பன்சால், ``4 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்போதுதான் அவர் கொல்லப்பட்ட தகவல் எங்களுக்குக் கிடைத்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநிலத்தின் பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச் , குப்வாராவில் எனப் பல இடங்களில் உள்ளூர்வாசிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் அனந்த்நாக், பஹல்காம், பைஸ்ரான் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளன. சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
