செய்திகள் :

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

post image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது, நம்மிடம் பேசியவர்கள், "திண்டுக்கல் மாவட்டம் வண்ணார் விளாம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22), பி.காம் பட்டதாரி‌. இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருமுக்குளம்மேடு தெப்பம் பகுதியில் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர் அப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்த சூர்யா, பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வைத்து கல்லூரி மாணவியை மடக்கிப் பேச முயன்றுள்ளார்.

அதற்குக் கல்லூரி மாணவி இடம் கொடுக்காமல் நகர்ந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பேச மறுத்து கல்லூரி மாணவி விலகிச் செல்வதைத் தாங்க முடியாத சூர்யா, தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

காவல் நிலையம்

அதிர்ஷ்டவசமாகக் கத்தியின் கூர்முனை சூர்யாவை நோக்கியும், கத்தியின் பின்புற பகுதி கல்லூரி மாணவியின் கழுத்தையும் அழுத்தியிருந்ததால் கழுத்து அறுபடாமல் தப்பித்து விட்டார்.

இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட கல்லூரி மாணவி சூர்யாவின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு உதவிக்கேட்டுக் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் பதறிப்போன சூர்யா, தான்‌ தப்பிக்கும் முயற்சியில் கல்லூரி மாணவியின் கைகளில் இரண்டு இடத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அங்கு ஓடிவந்த சுற்றத்தினர், சூர்யாவைப் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காயமடைந்த கல்லூரி மாணவி மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிடிபட்ட சூர்யாவிடம் போலீஸ் விசாரணை நடத்துகையில், "தனது உறவினர்கள் வீட்டுக்கு எதிரேதான் கல்லூரி மாணவி தங்கியிருந்து படித்து வந்தார். உறவினர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் கல்லூரி மாணவியிடம் பேசி பழகி வந்ததாகவும் கூறியுள்ளார்.‌

இந்த பழக்கத்தில் கல்லூரி மாணவி மீது, சூர்யாவுக்கு ஈர்ப்பு உண்டாகி காதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவியை ஒரு தலையாகக் காதலித்து வந்த சூர்யா, மாணவியிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியும் அதனை மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, பேசுவதைத் தவிர்த்து வந்த மாணவியை, மீண்டும் பழையபடி பேச வற்புறுத்திய நேரத்தில்தான் ஆத்திரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மருத்துவமனை

இதைத்தொடர்ந்து, அவர்மீது வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சூர்யாவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்" என்றனர்.

ஒருதலை காதலில், கல்லூரி மாணவியின் கழுத்தை இளைஞர் அறுக்க முயன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதி... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உ... மேலும் பார்க்க

திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்

மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற... மேலும் பார்க்க