செய்திகள் :

கேரள தொழிலதிபர் மனைவியுடன் கோடாரியால் வெட்டி கொலை; அஸ்ஸாம் இளைஞரிடம் விசாரணை; பின்னணி என்ன?

post image

கேரள மாநிலம் கோட்டயம் திருவாதக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலதிபரான விஜயகுமாரும் அவரது மனைவி மீராவும் பெரிய பங்களாவில் வசித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 22) காலை அவரது வீட்டுக்கு வேலைக்குச் சென்ற ரேவம்மா என்ற பெண் வீட்டு ஹாலில் விஜயகுமாரும், அறையில் மீராவும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

மேலும், அக்கம்பக்கத்தினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்தியதுடன், 2 உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. வீட்டின் பின்புற கதவை அம்மிக்குழவியைப் பயன்படுத்தி உடைத்து குற்றவாளி வீட்டுக்குள் சென்று கொலையை அரங்கேற்றி உள்ளதும், வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே கப்பி ஓடியதும் தெரியவந்தது.

கொலையாளிகள் கொலை செய்யப் பயன்படுத்திய கோடாரியை போலீஸார் மீட்டுள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை
கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை

வீவிஜயகுமாரின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவின் வீடியோக்கள் பதிவாகும் டி.வி.ஆர்-ரை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

விஜயகுமாரின் வீட்டிலிருந்து 3 செல்போன்களை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர். அதே சமயம் நகை, பணம் உள்ளிட்ட எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.

வீட்டில் வயது முதிர்ந்த ஒரு காவலாளி இருந்துள்ளார். அப்பகுதி மக்கள் தகவல் அறிந்து அங்குக் கூடிய பிறகுதான் காவலாளிக்கே கொலை சம்பவம் தெரிய வந்துள்ளது.

காவலாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டில் வளர்த்த நாய்க்கு உணவுப்பொருளில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு இந்த கொலையாளிகள் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அமீத் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.

விஜயகுமாரின் வீட்டில் வேலை செய்துவந்த அமீத் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த செல்போனை திருடியுள்ளார்.

அதன் காரணமாக அமீத்தை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் அவரது மனைவி மீரா
கொலை செய்யப்பட்ட விஜயகுமார் மற்றும் அவரது மனைவி மீரா

இது ஒருபுறம் இருக்க விஜயகுமாரின் மகன் கெளதம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களைப் பார்ப்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பாத கெளதம் ரயில்வே தண்டவாளத்தில் இறந்துகிடந்தார்.

அந்த வழக்கில் கெளதம் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்டது. கெளதம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை கேட்டும் விஜயகுமார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன் காரணமாக அந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்திக் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில்தான் விஜயகுமாரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, கெளதம் வழக்குக்கும், விஜயகுமார் தம்பதியின் கொலைக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

காதலிக்க மறுத்த மாணவி; கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்; பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது, நம்மிடம் பேசியவர்கள், ... மேலும் பார்க்க

Elephant: ``சுற்றுலா பயணிகளின் அத்துமீறலால் பரிதாபமாக உயிரிழந்த பெண்..'' - வனத்துறை சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுமார் 55 வயதான சரசு. தபால்துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த இவர் தன்னுடைய கணவருடன் நேற்று முன்தினம் மாலை பொக்காபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ... மேலும் பார்க்க

`16-ம் தேதி திருமணம்.. 22-ம் தேதி கடற்படை அதிகாரி பலி' - ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் நடந்த கொடூரம்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் பணியில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திரும... மேலும் பார்க்க

Jammu - Kashmir: உளவுத்துறை அதிகாரி உள்பட 28 பேர் பலி!; ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதி... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உ... மேலும் பார்க்க

திருமணம் செய்ய சொன்ன பெண் எஸ்.ஐ; துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிய இன்ஸ்பெக்டர் - தண்டனை விவரங்கள்

மும்பை கல்யாண்-ல் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் அஸ்வினி. இவரை கடந்த 2016-ம் ஆண்டு தானே இன்ஸ்பெக்டர் அபய் குருந்தர் கடத்திச்சென்று படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கடலில் வீசிவிட்டதாக குற... மேலும் பார்க்க