பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்: ஜம்முவில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் தாக்குதல்: `இதுவரை 28 பேர் பலி' - தாக்குதலுக்கு பின்னணியில் யார்?
நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் 'நாங்கள் தான் இருக்கிறோம்' என்று லஷ்கர்-இ-தொய்பா என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா - பின்னணி என்ன?
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவரான ஷேக் சஜ்ஜாத் குல்லை தீவிரவாதி என அறிவித்தது.
இதனையடுத்து, புதிதாக மாற்று அமைப்பாக உருவாக்கப்பட்டது 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்' ஆகும். இந்த அமைப்பின் கீழ் தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்தல் போன்றவற்றை செய்துள்ளது எனவும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில், இது மிகப் பயங்கர தாக்குதல் ஆகும்.