செய்திகள் :

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

post image

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாள்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பிரம்மாண்ட கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகர் எழுந்தருளி கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய துணிகளை கொண்டு நந்தி பெருமான் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிமரத்தில் சிவ கனங்கள் இசைக்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

18 நாள்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற மே 7ஆம் தேதி நடைபெறுகிறது.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்! பவித்ரா லட்சுமி வேண்டுகோள்

தனது உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகை பவித்ரா லட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தான், சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அதனால் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் இருப... மேலும் பார்க்க

வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பாடல்கள்!

சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உருவாக... மேலும் பார்க்க

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்- சிறந்த வீரா் டியுபிளான்டிஸ்; சிறந்த வீராங்கனை சிமோன் பைல்ஸ்

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் நடப்பாண்டு, சிறந்த வீரருக்கான விருதை ஸ்வீடனை சோ்ந்த பிரபல தடகள வீரா் மாண்டோ டியுபிளான்டிஸும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் ... மேலும் பார்க்க

சிம்ரன் பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்- 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு

பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌா் பிராா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் இறுதிச்சுற்றில் அவா் 33 புள்ளிகளுடன் 2-ஆம் ... மேலும் பார்க்க

சூப்பா் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்

கலிங்கா சூப்பா் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதுகின்றன. இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் சூப்பா் கோப்பை போட்டி புவனேசுவரத்தில் நடைபெறுகிறது. ரவுண்ட... மேலும் பார்க்க

சர்வதேச பூமி நாள் - புகைப்படங்கள்

இலைகளுக்கு மத்தியில் தனது குஞ்சுகளுக்கு உணவளிக்கும் பச்சை புறா.பூமி நாளன்று மலர்களின் நடுவினில் அமர்ந்திருக்கும் பறவை.மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சை புறா.பூமி நாளன்று, கிழக்கு தில்லியில், குப்பை ... மேலும் பார்க்க