செய்திகள் :

`அவுங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணிருக்காரு; அது `தல’ படம்' - கங்கை அமரன் கருத்து குறித்து பிரேம்ஜி

post image

அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தனது பாடல்களைப் பயன்படுத்தியதாகப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் பேசுப்பொருளான நிலையில் இளையராஜாவின் தம்பியான  கங்கை அமரன் பாடல் காப்புரிமைத் தொடர்பாக சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசியிருந்தார். அதாவது, “7 கோடி சம்பளத்துக்கு ஒரு மியூசிக் டைரக்டரை புக் பண்றாங்க.

இளையராஜா-கங்கை அமரன்
இளையராஜா-கங்கை அமரன்

ஆனால் அவர்கள் போடுற பாட்டை விட நாங்க போட்ட பாட்டுக்குதான் கைதட்டல் அதிகமாக இருக்கு. அதனால் அதற்கான கூலி எங்களுக்கு வர வேண்டும் அல்லவா. அனுமதி கேட்டால் கொடுத்து விடுவோம். கேட்காமல் போடுவதுதான் இளையராஜாவுக்கு கோவம் வருகிறது” என்று பேசியிருந்தார்.

மேலும் எங்க பாட்டுனாலத் தான் படம் ஹிட்டானது என்ற தொனியில் பேசியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிரேம்ஜி பதில்

இந்நிலையில் ‘வல்லமை’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில்  கங்கை அமரன் கருத்து குறித்து அவரது மகனும் நடிகருமான பிரேம்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரேம்ஜி, “பெரியப்பாவின்(இளையராஜா) காப்புரிமை விவகாரம் போய்கொண்டிருக்கிறது. அதற்கு அப்பா(கங்கை அமரன்) அவர் அண்ணனுக்காக சப்போர்ட் பண்ணி பேசி இருக்கிறார். என் அண்ணனைப் பற்றி எதாவது பிரச்சனை வந்தால் நான் சப்போர்ட் பண்ணி பேசுவேன். அந்த மாதிரிதான் அவரும் பேசியிருக்கிறார்.

பிரேம்ஜி
பிரேம்ஜி

ராயல்டி என்பது இசையமைப்பாளரைத் தாண்டி எல்லாருக்குமே இருக்கும். அவரவர்களின் பாடல்களைக் கேட்கும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு ராயல்டி போகும். எனக்கும் நான் இசையமைத்த பாடல்களுக்காக மாதம் மாதம் ராயல்டி வந்துக்கொண்டிருக்கிறது. பெரியப்பா அவர் கம்போஸ் பண்ண பாடலுக்கு கேட்கிறார். மற்றபடி அது குறித்து விரிவாக எனக்கு எதுவும் தெரியாது” என்றிருக்கிறார்.

'எங்க பாட்டுனாலத் தான் படம் ஹிட்டானது என்று கங்கை அமரன் பேசியிருந்தாரே' அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று பத்திரிகையாளர் கேள்வி  கேட்டதற்கு, “ அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. தலப் படம் அவருக்காக மட்டுமே  ஓடும்” என்று பதிலளித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Pahalgam Attack: "மத வெறுப்பாகத் திசைதிருப்பாதீர்கள்" - ஆண்ட்ரியா வேண்டுகோள்

காஷ்மீரின் பஹல்காமில் குதிரை சவாரி செய்து பைசரன் மலை உச்சி வரை சென்று அங்கிருக்கும் ரிசார்ட்டில் தங்கி வருவது பிரபலமான சுற்றுலாப் பயணமாக இருந்து வருகிறது.சுற்றுலாப் பயணிகள் அங்கு இருக்கும் இந்தக் குதி... மேலும் பார்க்க

Dhanush: பாங்காக்கில் ஆக்‌ஷன்; அசத்தலான டூயட் ஷூட், 'இட்லி கடை'க்கு அடுத்து தனுஷை இயக்கும் இயக்குநர்

வியக்க வைக்கிறது தனுஷின் உழைப்பும், லைன் அப்களும். ஹீரோ, பாடலாசிரியர், இயக்குநர் என பல தளங்களில் இயக்கி வரும் அவர், நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என ஓடி ஓடி உழைத்து வருகிறார். இந்தியில் 'தேரே... மேலும் பார்க்க

Sachein: ``சச்சின் படத்தோட வாய்ப்பு எனக்கு லக்ல கிடைச்சது!'' - வைரல் ராஷ்மி பேட்டி

'சச்சின்' ரீ ரிலீஸிலும் ரசிகர்களின் ஹார்டின்ஸை அள்ளியிருக்கிறது. கூடவே நாஸ்டால்ஜியா நினைவுகளையும் மீண்டும் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது. இந்த ரீ ரிலீஸில் மூலம் தற்போது ஒருவர் வைரலாகிக் கொண்டிருக்க... மேலும் பார்க்க

Ajith Kumar: "நீங்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை" - கார் ரேஸ் வெற்றி குறித்து நன்றி தெரிவித்த அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமார் கடந்த சில மாதங்களாக கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர், `அஜித் குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் ரேஸ் அணி வைத்திருக்கிறார். ... மேலும் பார்க்க