செய்திகள் :

பெஹல்காம் தாக்குதல்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

post image

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசுகையில், “ ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகவும் கொடூரமாக தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பைசரான் பகுதியில் மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. இது போன்ற கடுமையாக தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிக்க: பெஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

இது மிகவும் மோசமான தாக்குதல் என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்தத் தகவல் கிடைத்ததும் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேவையான உதவிகளை செய்யவும், மருத்துவ வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தேவையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்ஹாமில் 8 பக்தர்களும், 2019 ஆம் ஆண்டில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்பார்கள் ” எனத் தெரிவித்தார்.

மும்பை - குமரி இடையே கோடை சிறப்பு ரயில்!

மும்பை - கன்னியாகுமரி இடையே வாராந்திர கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வருகிறது. அந்தவக... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பம் தகிக்கும்!

தமிழகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 28-க்கு ஒத்திவைப்பு!

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஏப். 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர... மேலும் பார்க்க

69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ராமதாஸ்

காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் தொடரும் குழப்பத்தை அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு காவல்துறைக்கு 621 ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் வேங்க... மேலும் பார்க்க