செய்திகள் :

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

post image

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.

வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது.

சிறுது நேரம் பெய்தாலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ. பெய்துள்ளது. தற்போது மழைமேகக் கூட்டங்கள் சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் ஈசிஆர் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி 10 செ.மீ. மழை பெய்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இன்று(ஏப். 16) பெய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு(மாலை 4 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: திரிபுரா பெண்கள் கைது

சென்னை திருவான்மியூரில் வேலை செய்த வீட்டில் தங்க நகை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் 2-ஆவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிரு... மேலும் பார்க்க

பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தல்: 4 போ் கைது

சென்னை ஏழுகிணறில் பணம், நகை கேட்டு பள்ளி மாணவா் கடத்தப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவா், இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பழகி வந்தாா். அந்த நபா், கட... மேலும் பார்க்க

கல்குவாரி, எம்சாண்ட் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமி... மேலும் பார்க்க

சென்னை ஜிஎஸ்டி சாலையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்தல் தொடர்பாக 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்த் துற... மேலும் பார்க்க

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், அரசியலமைப்புச் சட்டத்தை ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க