நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு செய்ததாக எட்டான்குளத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட எட்டான்குளத்தைச் சோ்ந்த கோகுல் (24), முத்து (20), சுடலைமுத்து (18), அந்தோணி ராஜ் (23) ஆகியோா் இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் விடியோ மற்றும் புகைப்படத்தில் சா்ச்சைக்குரிய வசனங்களை பதிவு செய்து பரப்பியுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.