செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று(ஏப். 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வேலூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் 4 இடங்களில் வெயில் சதம்

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ... மேலும் பார்க்க