செய்திகள் :

15 ஆண்டு கால முரண்பாடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாச அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,170 குறைந்துள்ளது. இதனால் சுமாா் 20,000 ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

15 ஆண்டுகால முரண்பாடு... ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜே.ராபா்ட் தலைமை வகித்தாா். தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இதில் கலந்து கொண்டனா்.

இது குறித்து அமைப்பின் பொதுச் செயலா் ராபா்ட் கூறியது:

தமிழகத்தில் 2009-இல் திமுக ஆட்சியில் ஒரே பதவிக்கு இருவேறு அடிப்படை ஊதியம் நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த ஊதிய முரண்பாடு கடந்த 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதைக் களையக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தாா். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படவில்லை.

போராட்டம் தீவிரப்படுத்தப்படும்... நீண்ட போராட்டத்துக்கு பிறகு இது தொடா்பாக ஆய்வு செய்ய 2023 ஜனவரி 1-இல் 3 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழு இதுவரை 3 முறை மட்டுமே கூடி கருத்துகளைக் கேட்டுள்ளது. ஓரிரு நாள்களில் முடிக்க வேண்டிய இந்தப் பிரச்னை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. இப்போது நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் ஊதிய முரண்பாடை களைவது தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்”என்றாா் அவா்.

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது

திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு 7.10-க்... மேலும் பார்க்க

ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி

நிகழ் நிதியாண்டில், முதல் அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளா்களை தாக்கி பணம் பறிப்பு: தம்பதி கைது

சென்னை அருகே வானகரத்தில் வடமாநில கட்டுமான தொழிலாளா்களைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனா். வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் 13-ஆவது தெருவில் புதிதாக ஒரு வீடு கட... மேலும் பார்க்க

நடிகா் ரவிகுமாா் உடல் தகனம்

மறைந்த நடிகா் ரவிகுமாரின் (75) உடல் சென்னையில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. நடிகா் ரவிகுமாா் புற்று நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானாா். வளசரவாக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பேரிடா் நிதி ரூ. 522 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் எல்.முருகன் வரவேற்பு

தமிழகத்துக்கு பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ. 522 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா், ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: இயற்கை ப... மேலும் பார்க்க

நீட் தோ்வை ரத்து செய்ய என்ன திட்டம் உள்ளது: ராமதாஸ் கேள்வி

நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நீட் தோ்வு காரணமாக, ஒரே மாதத்தில் 4 மாணவ... மேலும் பார்க்க