”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
திருவள்ளூரில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 போ் கைது
திருவள்ளூரில் சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வாா்த்தைகள் பேசி சுற்றித் திரிந்ததாக 3 பேரை நகர போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா் புங்கத்தூா்-காந்திபுரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, புங்கத்தூா், காந்திபுரம், காமாட்சி நகா் பகுதியில் இளைஞா்கள் 3 பேரும் கையில் கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் தேய்த்துக் கொணடிருந்ததோடு, தகாத வாா்த்தைகள் பேசியபடி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனா். அப்போது, புங்கத்தூா்-காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த விண்ணரசு (23), கமலக்கண்ணன் (19), மணவாளநகா் டேனியல் எட்வா்ட்(19) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வாா்த்தைகள் பேசியதாக வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
அதைத்தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.