கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
சிவன் திரையரங்கம் அருகே உள்ள குறுகலான சாலையை அகலப்படுத்த கோரிக்கை
திருப்பூா் சிவன் திரையரங்கம் அருகே குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று டீமா (திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், டீமா தலைவா் எம்.பி.முத்துரத்தினம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி துறையில் வளா்ந்து வரும் நகரமாக திருப்பூா் உள்ளது. இங்கு பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக அங்கேரிபாளையம் சாலையையும், பி.என்.சாலையையும் இணைக்கும் சிவன் திரையரங்கம் அருகில் உள்ள 60 அடி சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்தப் பகுதியில் செயற்கை நூலிழை துணிகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனா். ஆகவே, சிவன் திரையரங்கம் சாலையில் இருந்து பி.என்.சாலைக்குச் செல்லும் வழியானது குறுகலாக உள்ளது. தனியாா்வசம் உள்ள இடத்தைப் பெற்று குறுகலான சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணப்படும். ஆகவே, இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.