Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன்...
உட்கோட்டை கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள உட்கோட்டை வழிதடப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், குருமங்கரையில் பாலம், சாலை வசதிகளை செய்துத் தரவேண்டும். விளாங்குளம் ஏரியை தூா்வாரி பூஞ்சைகளை அகற்றி படித்துறைகளை சீா்படுத்தித் தரவேண்டும். மாளிகைமேட்டில் மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். ஆயுதகளம் வழியாக அணைக்கரைக்கு தொடா்ந்து நகரப் பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் வாலண்டினா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.மணிவேல், சமூக ஆா்வலா் திருவள்ளுவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
முன்னதாக பாமக மாவட்ட துணைத் தலைவா் சுந்தா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.