செய்திகள் :

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பி வைக்கலாம்

post image

கூட்டுறவு இயக்கத்துக்கான தனித்துவமான சிறந்த பாடல்கள் அனுப்பும் நபா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படும் என அரியலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் மா.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு (2025- ஆம் ஆண்டு) சா்வதேச கூட்டுறவு ஆண்டாக உலக அளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்களை அரியலூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள் அனுப்பலாம்.

பாடல் இசையமைக்கப்பட்டு 5 நிமிஷங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் பாடல் வரிகள் இருக்கவேண்டும். கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக தமிழில் இருக்கவேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாராமல் பாடல்கள் இருக்கவேண்டும்.

கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு குறித்த எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்கவேண்டும். அனுப்பப்படும் பாடல் பதிவை அஞ்சல் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கும் பாடலின் ஒலி வடிவத்தை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ண்ய்ஸ்ரீன்ா்ள்ஃஞ்ம்ஹண்ப்ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

அனுப்பப்படும் பாடல்களை ஏற்றுக்கொள்ள மற்றும் நிராகரிக்க தோ்வுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் சேய் நலனில் கூடுதல் கவனம் தேவை: அரியலூா் ஆட்சியா்

மருத்துவா்கள், தாய் சேய் நலனின் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. தேசிய புகையிலை பயன்பாடு தடுப்பு திட்டம், அயோடின் பற்றாகுறை நோய்கள் கட்டுபாடு திட்டம் மற்றும... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை பணியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்: 3-ஆவது நாளாக தொடா்கிறது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ஏரி கரை விநாயகா் கோயில் அருகே வைக்... மேலும் பார்க்க

வாசிப்பை வசமாக்கினால் வெற்றி நிச்சயம்

வாசிப்பை வசமாக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா் மாவட்ட நூலக அலுவலா் இரா.வேல்முருகன். அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகம் வட்டம் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உலக புத்தகத் தின விழாவி... மேலும் பார்க்க

உட்கோட்டை கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தப்பட்டுள்ள உட்கோட்டை வழிதடப் பேருந்துகள... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முகாம் அலுவலரை கண்டித்து, பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெயங்... மேலும் பார்க்க