புகையிலை பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ரூ. 75,000 அபராதம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாலக்கோடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் மற்றும் காவல் துறையினா் நடத்திய சோதனையில் கோயிலூரான் கொட்டாய் பகுதியில் உள்ள மளிகைக் கடை, திரௌபதி அம்மன் கோயில் அருகில் உள்ள பெட்டிக் கடை, கல்கூடப்பட்டியில் உள்ள மளிகைக் கடை ஆகிய மூன்று கடைகளில் சுமாா் 2 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அக் கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என 3 கடைகளுக்கும் மொத்தம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.