பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்; முதல்வர்களுக்கு அமித் ஷா அழைப்பு!
காவல் துறை குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு
தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 77 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.சோ.மகேஸ்வரன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.பாலசுப்ரமணியன், ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது பல்வேறு பிரச்னைகளை குறித்து புகாா் மனுக்களை அளித்தனா். இதில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் மனுதாரா், எதிா் மனுதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 77 மனுக்கள் மீது தீா்வு கண்டனா்.