செய்திகள் :

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

post image

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் 10,000 பாதுகாப்பு படையினா் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

அவா்கள் நக்ஸல் தீவிரவாதிகளின் முக்கிய கூட்டமைப்பை சோ்ந்தவா்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை-வனப்பகுதிகளில் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி), சத்தீஸ்கா் மாநில காவல் துறை மற்றும் தெலங்கானா காவல் துறை உள்ளிட்ட பல்வேறு படையினருடன் இணைந்து வியாழக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த சண்டையில் மேலும் சில நக்ஸல்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை மேலும் சில நாட்கள் தொடரவுள்ளது’ என்றாா்.

இந்த மூவருடன் சோ்த்து, சத்தீஸ்கரில் நடப்பாண்டு பாதுகாப்புப் படையினரால் இதுவரை கொல்லப்பட்ட நக்ஸல் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 144-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 127 போ், நாராயண்பூா், கோண்டாகான் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன. முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களு... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை: பிரதமா் மோடி சூளுரை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப் பிடித்து அவா்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதா்களுக்கு இந்தியா விளக்கம்

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு இந்தியா வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க