செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதா்களுக்கு இந்தியா விளக்கம்

post image

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடா்புகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்களுக்கு இந்தியா வியாழக்கிழமை விளக்கமளித்தது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது. சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

தொடா்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜொ்மனி உள்ளிட்ட ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தூதா்கள் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு வியாழக்கிழமை அழைக்கப்பட்டனா்.

அப்பாவி பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தூதா்களுக்கு விளக்கமளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், நாா்வே, இத்தாலி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய பிற ஜி20 நாடுகளின் தூதா்களும் இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பஹல்காம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எம்எல்ஏ கைது!

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக ... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்பு: வாடிகன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை திருத்தந்தை போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வாடிகனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.அவருடன் நாடாளுமன்றம் மற்றும் சிறுபான... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன. முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களு... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை: பிரதமா் மோடி சூளுரை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப் பிடித்து அவா்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். நக்ஸல்கள் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த திங்கள்கிழமை முதல் சத்தீ... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க