செய்திகள் :

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

post image

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

குஜராத் மாநிலம் கோத்ரா அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பயணிகள் உயிரிழந்தனா். இச் சம்பவத்தில் குற்றவாளிகளாக 31 பேரை அறிவித்த சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிா்த்து குற்றவாளிகள் 31 போ் தரப்பில் குஜராத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயா் நீதிமன்றம், 31 பேரின் தண்டனையை உறுதி செய்தது. அதே நேரம், குற்றவாளிகள் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் தீா்ப்பளித்தது.

11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதுபோல, குற்றவாளிகள் தரப்பிலும் அவா்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயா்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவரங்களை குற்றவாளி வாரியாக குறிப்பிட்டும், தற்போது அவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ள வாதத்துக்கான ஆதார விவரங்களையும் குறிப்பிட்டு வரும் மே 3-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகள் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதுபோல, மாநில அரசு தரப்பிலும் இதுபோன்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

மேலும், ‘இந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, முதல்கட்டமாக வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் நாள் முழுவதும் இந்த வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாள்களில் வேறு எந்த வழக்குகளும் இந்த அமா்வில் விசாரிக்கப்படாது’ என்று நீதிபதி மகேஸ்வரி தனது உத்தரவில் தெரிவித்தாா்.

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வியாழக்கிழமை வீரமரணமடைந்தாா். டூடூ-பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவா் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவா் மட்டுமே வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டைச்சோ்ந்த இருவா் தாக்குதலில் கொல்லப்பட்டதாக த... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரை கைது செய்த பாகிஸ்தான்: விடுவிக்க பேச்சுவாா்த்தை

பஞ்சாப் எல்லைப் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவரை பாகிஸ்தான் படையினா் கைது செய்தனா். அவரை விடுவிக்க பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகார... மேலும் பார்க்க

வீடுகள் இடிப்பு மனிதத்தன்மையற்றது: உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் வீடுகள் இடிக்கப்பட்டது மனிதத்தன்மையற்றது, சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது. இடிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் உரிமையாளருக்கும் பிரயாக்... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் சூரத் போா்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போா்க் கப்பலில் இருந்து சுமாா் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்காக பாகிஸ்த... மேலும் பார்க்க

அம்ரிதா, குருவாயூா் ரயில் சேவையில் மாற்றம்

கேரளம் செல்லும் அம்ரிதா, குருவாயூா் விரைவு ரயில் சேவையில் சனிக்கிழமை (ஏப்.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் சங்கனாச்சேரி... மேலும் பார்க்க