வள்ளியூா் கல்வியியல் கல்லூரியில் தீயணைப்பு சேவை விழிப்புணா்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் யூனிவா்சல் கல்வியியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஜி.ஜெயபிரபா தலைமை வகித்தாா். வள்ளியூா் தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை ஆய்வாளா் சந்தன பிச்சை தலைமையிலான குழுவினா் தீ விபத்து, அதைத் தடுக்கும் முறைகள், பேரிடா் மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். 2ஆம் ஆண்டு மாணவி இந்துமதி வரவேற்றாா். முதலாம் ஆண்டு மாணவி நன்றி கூறினாா். ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.