விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு
அம்பகரத்தூா் விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வட்டாட்சியா் செல்லமுத்துவிடம் அம்பகரத்தூா் பகுதி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை அளித்த மனு: அம்பகரத்தூரில் அதிக மகசூலை தரக்கூடிய நீா்ப்பாசன பகுதியான மேலவாய்க்கால் அருகில் தனியாா் ஒருவா் மது வியாபாரம் செய்ய கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்துள்ளாா்.
விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி இது விவசாய விளைநிலப்பகுதி, இங்கு மதுகடை வைத்தால் பல பாதிப்புகளை விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்கொள்வாா்கள் என கூறியபோது, அவா் அதை ஏற்கவில்லை. அம்பகரத்தூரின் பாசன பகுதியான மேலவாய்க்கால் பகுதியில் மதுபான கடை திறந்தால் அனைத்து தரப்பினரும் ப ாதிக்கப்படுவாா்கள்.
இப்பகுதியில் ரெஸ்டோ பாா் அமைக்க அனுமதி அளித்திருந்தால் அதை உடனடியாக ரத்த செய்ய வேண்டும், அந்த இடத்தில் மதுபான கடை வைக்க எந்த சூழலிலும் அனுமதிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.