Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக புத்தக தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். உலகப் புத்தக தினத்தையொட்டி, 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் ‘உங்கள் வழியில் படியுங்கள் என்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு பட்டதாரி ஆசிரியா் பி. பாரதிராஜ் விளக்கினாா். நூலக தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், நூல்களின் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. கற்பித்தல் பணிக்கு ஏதுவான ஆசிரியா்கள் பயன்படுத்தும் புத்தகங்கள், பாடத் திட்டங்களுக்கேற்ப வினா வங்கிப் புத்தகங்கள், வழிகாட்டிப் புத்தகங்கள், பல்வேறு பாடங்களுக்கான செயல் திட்ட மாதிரிகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்ட அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு புத்தகங்களில், மாணவா்கள் விரும்பும் புத்தகத்தை தோ்வுச் செய்து படித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் டி. மாலதி, நூலகா் எஸ். கீதா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.